Categories
தேசிய செய்திகள்

கொரானா எதிரொலி: டெல்லியில் 144 தடை உத்தரவை மீறிய 2000 வாகனங்களுக்கு அபராதம்.!!

ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் அதை பின்பற்றாத 2000 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு , கொரோனா அறிவுறுத்தலை முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். பொதுமக்கள் சிலர் வைரஸை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அரசுகள் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை முழுமையாக பின்பற்றவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மிக முக்கியமான சில அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசாங்கம் பிறப்பிக்கக்கூடிய உத்தரவுகளையும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும், இதனை மீறக்கூடிய பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முக்கிய அறிவிப்பு வந்திருக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் ஊரடங்கு   மீறி உலா வந்த 2000 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நொய்டாவில் 144 தடை உத்தரவை மீறியதால் 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |