இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் 10 லிட்டர் அளவுள்ள 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இதற்காக பல நிறுவனங்கள், பிரபலங்கள் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.
இதைத்தொடர்ந்து தற்போது கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் 10 லிட்டர் அளவுள்ள 2,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் நோயாளிகளுக்கு தேவைப்படும் முக்கிய மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.