Categories
அரசியல்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் 84 சின்னங்கள் தேர்தல் ஆணையம் .

இந்தியாவில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிட விண்ணப்பித்து உள்ளனர் இந்நிலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் 84 சின்னங்களை ஒதுக்கியுள்ளது

மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது தமிழகத்தில் வருகின்ற  ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் மற்றும் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர்

இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கான மனுவானது தேர்தல் ஆணையத்தில்  கொடுக்கப்பட்டு வருகிறது மேலும் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் குறித்த  குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது தற்பொழுது கட்சிகள் குறித்து தேர்தல் ஆணையம் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்தியாவில் சுமார் 2300 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதிவு செய்து உள்ளனர் .மேலும்  தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி ஒன்பதாம் தேதி வரை மொத்தம் 2,300 க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட பதிவு செய்து உள்ளனர் இதில்  அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன இதனை தொடர்ந்து பிற கட்சிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் இந்தக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் 84 சின்னங்களை மட்டும்  ஒதுக்கீடு செய்ய உள்ளது இந்த 84 சின்னங்களுக்குள் மட்டுமே ஒரு சின்னத்தை தேர்வு செய்து அவர்களால் போட்டியிட முடியும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது

Categories

Tech |