Categories
மாநில செய்திகள்

20,000 காலி பணியிடங்கள்…. மாணவர்கள் வெற்றி பெற…. தமிழக அரசு புதிய முயற்சி…!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற உதவும் வகையில் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் “tamilnaducareerservices.tn.gov.in” என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி வகுப்புகள் ‘TN Career Services Employment’ என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |