நாட்டின் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் பி மற்றும் சி எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 20000
கல்வித் தகுதி: டிகிரி
வயது: 27- க்குள்
சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,100
தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலை தேர்வு மற்றும் எழுத்து தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 8
மேலும் கூடுதல் விவரங்களை அறிய https://ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
இந்நிலையில் இந்த பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் எட்டாம் தேதி விண்ணப்பிக்க வேண்டும் என விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்தமாதம் 11-ந்தேதி இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பித்து, இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்