இந்தியாவில் கொரோனா வைரஸ் பல லட்சத்தை கடந்துள்ள நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு எங்கே? என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் தற்பொழுது வரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கையானது 20,27,000 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்து விட்டது. குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13,70,000 ஆக உள்ளது. பல லட்சத்தை கடந்துவிட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மத்திய அரசை டுவிட்டரில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது சம்பந்தமாக சென்ற ஜூலை மாதம் 17ஆம் தேதி ராகுல்காந்தி பதிவிட்ட ட்விட்டர் பதிவை இன்று பதிவிட்ட ட்விட்டர் பதிவோடு இணைத்து பதிவிட்டுள்ளார்.
ஜூலை 17ஆம் தேதி அவர் பதிவிட்ட பதிவானது,” இந்தியாவில் இதே வேகத்தில் கொரோனா பாதிப்பு சென்றால் வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் பாதிப்பு எண்ணிக்கையானது 20 லட்சத்துக்கு மேலாக மாறும். அதனால் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து கொரோனா பரவலை தடுக்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார். மேலும் இது பற்றி ராகுல் காந்தி சென்ற மாதம் 17ஆம் தேதி ட்விட்டரில் பதிவிடும் பொழுது, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டி இருந்தது. அதன்பின் அவர் 20 நாட்களுக்கு பிறகு பதிவிடும் பொழுது அடுத்த பத்து லட்சத்தை தாண்டி இருந்தது. அதேபோல் அவர் இன்று பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்துள்ளது. மோடி அரசை காணவில்லை” என பதிவிட்டிருந்தார்.