2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.. கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி மக்களவை கூட்டத்தொடர் என்பது நடைபெற்று வரும் சமயத்தில், பாகிஸ்தான் அமைப்பை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு அடங்கிய 5 தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்து திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினர்..
இதில் 5 பாதுகாப்பு படைவீரர்கள், சி.ஆர்.பி.எப் பெண் போலீஸ், நாடாளுமன்ற கண்காணிப்பு பிரிவில் 2 பாதுகாப்பு உதவியாளர் என மொத்தம் 9 நபர்கள் வீர மரணமடைந்தனர்… நீண்ட போராட்டத்திற்கு பிறகு 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.. ஆண்டு தோறும் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 9 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் அந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 9 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது..
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு உயிரிழந்த 9 பேர் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.. இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.. இந்த நிகழ்வில் கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.