இந்தோனேசியாவில் 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமியில் மாயமான காவல்துறை அதிகாரி ஒருவர் மனநல மருத்துவமனை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் கடந்த 2004 ஆம் வருடம் கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியில் ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். இதில் Abrip Asib என்ற காவல்துறை அதிகாரியும் ஒருவர். இவர் உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் கடந்த 16 வருடங்களாக நம்பியிருந்தனர். இந்நிலையில் Abrip ஒரு மனநல மருத்துவமனையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவன் குடும்பத்தினர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். அதாவது காவல்துறை அதிகாரியாக பணியில் இருந்தபோது, சுனாமி சமயத்தில் நடந்த கொடூரமான காட்சிகளால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இத்தனை ஆண்டுகளாக அந்த மருத்துவமனை Abrip இன் குடும்பத்தினரிடம் அவர் குறித்து ஏன் தகவல் அளிக்கவில்லை, மேலும் தற்போது அவரை குடும்பத்தினர் எப்படி கண்டறிந்தார்கள் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. ஆனால் 16 வருடங்களாக இறந்ததாக நினைத்துக்கொண்டிருந்த குடும்பத்தினருக்கு தற்போது Abrip கிடைத்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மேலும் இந்த சுனாமியால் மாயமானவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. எனவே மேலும் அதிகமானோர் மாயமாகியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சுனாமியில் 1,67,000 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள்.