Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

ஒரே நாளில் 2,004 பேர் பலி….! ”உலகளவில் முதலிடம்” சோகத்தில் இந்தியா …!!

கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா புதிய உச்சம் பெற்றுள்ளது மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து தாண்டியுள்ளது. உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனவைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டைந்தோர்  எண்ணிக்கை 82 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 43 லட்சத்து 06 ஆயிரத்தை  கடந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக  கொரோனா வைரஸ் தொற்றால் 2,004 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 11 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் ரஷ்யாவில் 5 லட்சத்து 45 ஆயிரத்து க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்த்துக்கும்மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இரண்டாம் இடத்திலுள்ள பிரேசிலில் 9 லட்சத்து 28 ஆயிரத்து க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரத்து 456  பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்து 8 ஆயிரம் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக இது ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் பிரேசில் நாட்டில் 1,338 பேரும், அமெரிக்காவில் 849 பேரும், மெக்ஸிகோவில் 439 பேரும், பிரிட்டனில் 233 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |