மும்பை அருகே உள்ள ராய்கார்டு கடலில் கடந்த வியாழக்கிழமை ஏகே 47 ரக துப்பாக்கிகள் தோட்டாக்களுடன் ஆயுத படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது பயங்கரவாதிகளின் சதி வேலையா என மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவினர் போலீஸர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திடீரென பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கும் மிரட்டல் வந்துள்ளது. ஒர்லி போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் நம்பருக்கு நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் மர்ம நபரிடம் இருந்து அடுத்தடுத்து குறுந்தகவல் வந்துள்ளது.
அதில் 2008 ஆம் வருடம் நடந்ததை போல மும்பையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதேபோல மும்பையை தகர்ப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு ஆறு பேர் தாக்குதல் நடத்துவார்கள். அது 2008 ஆம் வருடம் நடந்த தாக்குதலை நினைவுபடுத்தும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர குறுந்தகவல் ஒன்றில் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் அமெரிக்காவால் சமீபத்தில் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவர் அய்மன் அல்- ஜவாஹிரி போன்றோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அரை போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக போலீசார் வாகன தணிக்கை தீவிர படுத்தியுள்ளனர். மேலும் கடலோர பணிகள் முடக்கிவிடப்பட்டது. இந்த சூழலில் போலீசாருக்கும் மிரட்டல் வந்த போன் நம்பர் பாகிஸ்தானை சேர்ந்தது என மற்றொரு அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இது பற்றி மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் நிருபர்களிடம் பேசும் போது மிரட்டல் குறுந்தகவல் வந்த போன் நம்பர் பாகிஸ்தானை சேர்ந்தது. அதனால் இந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.
மேலும் இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். குறுந்தகவளில் இந்தியாவைச் சேர்ந்த சில செல் போன் நம்பர்களும் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த எண்களை தொடர்பு கொள்ள இருக்கின்றோம். மேலும் மும்பை நகர மக்களுக்கு பாதுகாப்பளிப்பது எங்களின் பொறுப்பாகும். மும்பை போலீசார் கடலோர காவல் படையினர்கள் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். அனைத்து இடங்களிலும் சோதனை தீவிர படுத்தப்பட்டு இருக்கிறது என கூறியுள்ளார்.