இந்தியா முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பில் தொடர்புடைய இடங்களில் கடந்த 22-ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சில கருத்துக்களை கூறியிருந்தார். இதற்கு கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருந்தார். அவர் கூறியதாவது, தமிழக முதல்வருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பற்றி தெரியுமா, தெரியாதா? நான் என்னுடைய வாழ்நாளில் ஐபிஎஸ் அதிகாரியாக 11 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். 11 ஆண்டுகள் என்றால் 5000 நாட்கள்.
இந்த காலத்தில் மொத்தம் 2 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளை பதிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த கருத்தை அண்ணாமலை கூறியதில் இருந்தே சமூக வலைதளங்களில் பலரும் அவரை கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். அதாவது காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ மட்டும்தான் எஃப்ஐஆர் எழுத வேண்டும். ஐபிஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தான் செய்வார்கள். அப்படி இருக்கும்போது அண்ணாமலை தன்னுடைய வாழ்நாளில் ஒரு எஃப்ஐஆர்-ஐ கூட எழுதி இருக்க வாய்ப்பு கிடையாது.
இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற அண்ணாமலை கடந்த 2019-ம் ஆண்டு ராஜினாமா செய்து விட்டார். அப்படி பார்த்தால் 6 வருடங்கள் மட்டும்தான் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார். இதுல எங்க இருந்து 11 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் வரும். அதன்பின் 11 வருடங்கள் என்றால் மொத்தம் 4015 நாட்கள். ஒரு நாளைக்கு 50 வழக்குகள் என்றால் மொத்தம் 200750 வழக்குகள் தான் சராசரியாக பதிவாகி இருக்கும். மேலும் அண்ணாமலை ஏதோ 20,000 புத்தகங்களை படித்துவிட்டு ஒரு ப்ளோவில் கூறியது போன்று இருப்பதாக டுவிட்டரில் பலரும் கலாய்கின்றனர்.