2015 -2016 முதல் 2017 -2018 வரையிலான கல்வியாண்டில் சேர்ந்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு 2022ஆம் ஆண்டு ஏப்ரல்,நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் அனுமதி அளிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் அரியர் தேர்வுகளை கடந்த 2015ஆம் ஆண்டு முதல் முடிக்காத மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பரில் நடைபெறும் தேர்வுகளில் இவர்கள் தேர்வு எழுதலாம்.
இதுவே இவர்களுக்கு இறுதி வாய்ப்பு ஆகும். இதனைப் போலவே முதுநிலை மாணவர்கள் 2015 முதல் 2019 வரையிலான கல்வி ஆண்டில் அரியர் வாய்ப்புள்ளவர்கள் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாத தேர்வு எழுதி வாய்ப்பாகும். மேலும் இது குறித்த விவரங்களை www.unom.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. எனவே அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.