மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த Beatrice stockli என்பவர் மாலி நாட்டில் கிறிஸ்துவ மிஷனரியாக சேவையாற்றி வந்தார். அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மாலியில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினால் கடத்தப்பட்டு பின்னர் 9 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.அதன் பிறகும் Beatrice stockli மீண்டும் தொடர்ந்து சேவையாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Beatrice stockli மீண்டும் கடத்தப்பட்டார்.
பிரான்ஸ் அதிகாரிகள் கடந்த 2020 அக்டோபர் மாதம் 9ம் தேதி Beatrice stockli கொல்லப்பட்டதாக தகவல் தெரிவித்தனர். ஆனால் அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் Beatricestockli உடல் தற்போது கிடைத்துள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டது. மேலும் அது Beatrice stockli உடல் பாகங்கள் தான் என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. இதனை தொடர்ந்து சுவிஸ் வெளியுறவு அமைச்சர் Ignazio cassis அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவரது உடலை சுவிட்சர்லாந்துக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.