Categories
அரசியல்

2016 சட்டமன்ற தேர்தல் ”வரவு, செலவுகள்”…. கணக்கு காட்டிய திமுக – அதிமுக

சட்டமன்ற தேர்தலில், சட்டமன்ற தொகுதிக்கு 28 லட்ச ரூபாயும், நாடாளுமன்ற தொகுதிக்கு 70 லட்ச ரூபாயும் வேட்பாளர் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.இந்தநிலையில் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செய்த தேர்தல் செலவுகள் எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம் ?

தமிழகம், புதுச்சேரி தேர்தல் வரவு செலவு விவரத்தினை திமுக பொதுச்செயலாளர் மறைந்த க அன்பழகனும், அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மறந்த ஜெயலலிதா அப்போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தார்கள். 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிப்பின் போது திமுகவின் வங்கி இருப்பு 205 கோடியாகவும், அதிமுகவின் கையிருப்பு மற்றும் வங்கி இருப்பு 217 கோடி ரூபாயாகவும் இருந்தது.தேர்தல் அறிவிப்பிற்கு பின்னர் டெபாசிட் மூலமான வட்டியாக திமுகவிற்கு 9 கோடியே 69 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. அதிமுக தாக்கல் செய்துள்ள கணக்கில் மாவட்டங்கள் மூலம் வரவாக 4 கோடியே 10 லட்ச ரூபாய் காட்டப்பட்டுள்ளது.

செலவுகளை பொருத்தவரையில் திமுக தலைவர்கள் நட்சத்திர பேச்சாளர்களின் போக்குவரத்திற்கு 1 கோடியே 16 லட்சம் ரூபாயும், அதிமுக நட்சத்திர பேச்சாளர்களின் போக்குவரத்திற்கு 20 லட்ச ரூபாயும், தலைவர்களின் போக்குவரத்திற்கு 9 கோடியே 42 லட்சம் ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளன. அச்சு, தொலைக்காட்சி, டிஜிட்டல் விளம்பரங்களுக்கு திமுக 33 கோடியே 46 லட்சம் ரூபாயும், அதிமுக 49 கோடியே 71 லட்சம் ரூபாயும் செலவு செய்துள்ளன. பிரச்சார போஸ்டர், பேனர், பனியன் போன்றவற்றிற்கு திமுக 8 கோடியே 56 லட்சம் ரூபாயும், அதிமுக 4 கோடியே 14 லட்ச ரூபாயும் செலவிட்டுள்ளனர்.

பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்கு திமுக 8 கோடியே 88 லட்சம் ரூபாயும், அதிமுக 1 கோடியே 18 லட்சம் ரூபாயும் செலவு செய்துள்ளது. இதர செலவுகளுக்காக திமுக 29 லட்ச ரூபாயும், அதிமுக சார்பில் 4 லட்ச ரூபாயும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. தமிழகம் புதுச்சேரி தேர்தல்களில் மொத்த செலவு என்று திமுக ஒட்டு மொத்தமாக 53 கோடியே 37 லட்சம் ரூபாய்க்கு கணக்கு காட்டியுள்ளது. அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரி, கேரளா மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 64 கோடியே 72 லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

திமுக சார்பில் தொப்பி வாங்குவதற்கு 4 கோடியே 62 லட்ச ரூபாயும், மாஸ்க் வாங்குவதற்கு 1 கோடியே 86 லட்ச லட்ச ரூபாயும், பேட்ஜ் வாங்க 1 கோடியே 13 லட்சம் ரூபாயும், மப்ளர் வாங்க 63 லட்சம் ரூபாயும், துண்டு வாங்க 24 லட்ச ரூபாயும், ஸ்டிக்கர் வாங்க 4 லட்ச ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.அதிமுக தேர்தல் பிரச்சார செலவுகளில் விளம்பரங்களுக்கு அடுத்து அதிகமாக செலவழிக்கப்பட்டது ஜெயலலிதாவின் பயணத்திற்கு தான் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் 14 நாட்கள் பயணம் செய்துள்ளார். அதற்காக 9 கோடியே 42 லட்ச ரூபாய் அந்தக் கட்சி செலவு செய்துள்ளது.

Categories

Tech |