டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பாராகவும் இருப்பவர் எலான் மஸ்க் ஆவார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 % பங்குகளை வாங்கி உள்ளதாக சில நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியது. அதன்பின் மஸ்க் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புடைய 9 சதவீத டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதை அடுத்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மஸ்கை டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைத்தார். கடந்த 11ஆம் தேதி எலான் மஸ்க் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைய வேண்டாம் என்று முடிவு செய்து இருப்பதாக தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் கூறினார்.
டுவிட்டர் பங்குகளை வாங்குவதற்கான தொகை தொடர்பாக நடைபெற்ற கருத்து வேறுபாட்டால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் மஸ்க் மீண்டுமாக டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முன் வந்தார். இதற்கென இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயை அவர் இறுதியாக செலுத்தி டுவிட்டர் பங்குகளை வாங்க தயாராக உள்ளதாகவும் இத்தொகையும் மறுக்கப்பட்டால் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைய போவதில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதாவது ஒரு பங்கிற்கு இந்திய மதிப்பில் ஏறத்தாழ 4 ஆயிரம் வரை வழங்க மஸ்க் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து மஸ்கின் இந்த முடிவுக்கு டுவிட்டர் நிறுவனம் தரப்பில் “மஸ்கின் கோரிக்கை மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2017 ஆம் வருடமே டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக மஸ்கின் பதிவுகள் இப்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக எலான் மஸ்க், “தனக்கு டுவிட்டர் பிடிக்கும்” என முதலில் தெரிவித்துள்ளார். அதன்பின் அவரின் பதிவுக்கு கேள்வி ழுப்பிய ஒருவர் “அப்படியானால் நீங்கள் டுவிட்டரை வாங்கலாமே” என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்து உள்ள எலான் மஸ்க், “அதன் தொகை எவ்வளவு” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
I love Twitter
— Elon Musk (@elonmusk) December 21, 2017
How much is it?
— Elon Musk (@elonmusk) December 21, 2017