Categories
தேசிய செய்திகள்

2018ல் இருந்து தொடர்பு….. மேலும் 12 பெண்கள் நரபலியா?….. போலீசார் விசாரணை..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் லாட்டரி தொழில் விற்பனை செய்து பிழைப்பு நடத்து வந்த ரோஸ்லின் மற்றும் தர்மபுரியை சேர்ந்த பத்மா ஆகிய 2 பெண்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களை  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 2 பேரின் செல்போன் சிக்னலும் திருவல்லா பகுதியில் காட்டியது. அதோடு காணாமல் போன 2 பெண்களுடன் போலி மந்திரவாதியான முகமது சபி என்பவர் கடைசியாக பேசியதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருவல்லா பகுதியில் வசித்து வரும் ஆயுர்வேத மருத்துவரான பகவல் சிங் என்பவருக்கு அதிக கடன் பிரச்சினைகள் இருந்துள்ளது.

இந்த கடன் பிரச்சனையில் இருந்து எப்படி வெளியே வரவேண்டும் என்பது குறித்து போலி மந்திரவாதியான முகமது சபியிடம் மருத்துவர் பேசியுள்ளார். அதற்கு முகமது சபி 2 பெண்களை நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து நரபலி கொடுப்பதற்கான பெண்களை தான் அழைத்து வருவதாக கூறிய முகமது சபி அதற்கான பணத்தை மட்டும் மருத்துவரிடம் பெற்றுள்ளார். அதன் பிறகு தனக்கு தெரிந்த பத்மா மற்றும் ரோஸ்லின் ஆகிய 2 பேரையும் பூஜைக்கு முகமது சபி அழைத்து வந்துள்ளார். அவர்களிடம் இரவு நேர பூஜையில் கலந்து கொண்டால் பணம் தருவோம் என்று முகமது சபி கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்து 2 பெண்களும் பூஜையில் கலந்து கொள்ள வந்துள்ளனர்.

அங்கு பூஜையில் வைத்து 2 பெண்களின் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்தது விசாரணையில் தெரிய வந்ததால், முகமது சபி, மருத்துவர் பகவல் சிங் மற்றும் அவருடைய மனைவி லைலா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி பகவல் சிங் மற்றும் லைலா ஆகியோர் சமைத்து சாப்பிட்டுள்ளனர். மேலும் போலி சாமியாரின் அறிவுறுத்தலின் பேரில், செல்வம் பெருகும் என்பதற்காக நரபலி கொடுத்த பெண்களின் உடலை சாப்பிட்டதாக லைலா அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில்  எலந்தூர் என்ற பகுதியில் கிட்டத்தட்ட 3 பெண்கள் காணாமல் போய் உள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல பத்தனம்திட்டா மாவட்டத்தில் இதுவரைக்கும் கடந்த 5 ஆண்டுகளில் 13 பெண்கள் காணாமல் போய் உள்ளதாகவும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடந்திருக்க கூடிய இந்த நரபலி மற்றும் படுகொலைகளின் எதிரொலியாக தான் தற்போது விசாரணை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தற்போது கொலை நடந்திருக்கக்கூடிய வீட்டின் உரிமையாளரான பகவல் சிங் உடன் போலி மந்திரவாதி ஷாபி தொடர்பில் இருந்துள்ளார். அந்த தொடர்பு கிட்டத்தட்ட 2018 முதல் 4 ஆண்டுகளாக இவர்களுக்குள் இருந்துள்ளது. எனவே காணாமல் போன பெண்கள் இந்த பகுதியில் இதே போன்ற நரபலி செய்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் விசாரித்து இதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுவரைக்கும் காணாமல் போன பெண்கள் என்ன ஆனார்கள் என்ன நடந்திருக்கிறது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தி தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும்  தொடர்ந்து தற்போது நீதிமன்ற காவலில் இருக்கக்கூடிய 3  குற்றவாளிகளையும் தற்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 12 நாட்கள் அனுமதிக்ககோரி நீதிமன்றத்தில் போலீசார் கேட்டுள்ளனர்.

இந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்த நரபலி மற்றும் படுகொலைகள் நடந்த இடத்தில் சம்பவம் நடந்த பகவல் சிங்கின் வீட்டில் 3 குற்றவாளிகளையும் கொண்டு வந்து காவல்துறையினர் நேரடியாக என்னென்ன சம்பவங்கள் நடந்திருக்கிறது, எத்தனை பெண்கள் இங்கு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற கூடுதல் விவரங்களை விசாரிப்பதற்காக இந்த மூன்று பேரையும் அழைத்து வருவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். தற்போது இந்த சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பு மட்டும் தான் போடப்பட்டுள்ளது. இந்த இடம் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளது. தடயங்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக சீல் வைக்கப்பட்டுள்ளது

 

Categories

Tech |