தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் ஹால்மார்க் முத்திரை பதிப்பதற்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கனவே தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டியது அவசியம் என்று அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிப்பதற்கான கட்டணத்தை மத்திய அரசு 10 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்க நகைகள் மற்றும் கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் முத்திரை கட்டணமானது 35 ரூபாயிலிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல வெள்ளி நகை மற்றும் கலைப் பொருட்களுக்கான ஹால்மார்க் முத்திரை கட்டணம் 25லிருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகையின் எடை எவ்வளவாக இருந்தாலும் ஹால் மார்க் முத்திரை கட்டணம் என்பது ஒன்றுதான். எனவே நாம் வாங்கும் தங்க நகையில் ஹால்மார்க் முத்திரை என்பது கட்டாயம் இருக்க வேண்டும். வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இல்லை. ஒரு தங்க நகையில் 18K750 என்ற முத்திரை இருந்தால் அது 75% தூய்மையான தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.2018-க்கு பிறகு முதல்முறையாக ஹால்மார்க் முத்திரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.