Categories
மாநில செய்திகள் விளையாட்டு

2018 -19, 2019-20 விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்கள் யார்?…. தமிழக முதலமைச்சரின் விருதுகள் அறிவிப்பு..!!

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான தமிழக முதலமைச்சரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவோருக்கான தமிழக முதலமைச்சரின் விளையாட்டுத் துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. குறிப்பாக 2018 -2019 மற்றும் 2019-2020 ஆகிய ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2018 – 2019 சிறந்த வீரர்களாக பிருத்விசேகர் (லான் டென்னிஸ்) ஜீவன் நெடுஞ்செழியன் (டென்னிஸ்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2018 – 2019 சிறந்த வீராங்கனைகளாக ஸ்ரீ நிவேதா (துப்பாக்கி சுடுதல்) சுனைனா சாரா குருவில்லா (ஸ்குவாஷ்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 2019 -2020 ஆண்டுக்கான சிறந்த வீரர்களாக பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் (டென்னிஸ்) மோகன் குமார் (தடகளம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2019 – 2020இல் சிறந்த வீராங்கனைகளாக அனுசியா பிரியதர்ஷினி டேக்வாண்டோ) செலினா தீப்தி (டேபிள் டென்னிஸ்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |