திமுக ஆட்சிக்கு வந்து 6மாதம் தான் ஆகியுள்ளது. அதனால் தேர்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. 2019ஆம் ஆண்டில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நதிநீருக்கு தனி ஆணையம் அமைப்போம் என சொன்னார்கள், 60 வயதுக்கு சிறுகுறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் இதற்காக என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள் ? என்ற கேள்விக்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, இது எல்லாமே செஞ்சி இருக்கோம். கிசான் கிரெடிட் கார்ட் கேள்விப்பட்டிருப்பீர்களா என்று தெரியாது,
விவசாய நண்பர்களுக்கு 30 பைசாவில் மாதத்திற்கு 2லட்சம் ரூபாய் நீங்கள் கடன் வாங்கலாம். அதேபோல விவசாய நண்பர்களுக்கு 6ஆயிரம் ரூபாய் இந்தியாவில் மட்டும் உங்களுக்கு தெரியும்… 19 கோடி விவசாயிகளுக்கு வங்கி கணக்கிற்கு 6 ஆயிரம் ரூபாய் வருகிறது, தமிழ்நாட்டில் மட்டும் 46 லட்சம் விவசாயிகள்… இதே போல ஒவ்வொன்றை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் உதாரணத்திற்கு சொல்லிக்கொண்டே போகலாம்.
தமிழ்நாட்டில் அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு 500, 500 என்று 1500 ரூபாய். 8 கோடி பேர் இந்தியாவில் எல்.பி.ஜி கனெக்சன், தமிழ்நாட்டில் 42 லட்சம் பேருக்கு முதன்முதலாக எல்.பி.ஜி கனெக்சன். இந்த மாதிரி நிறைய சொல்லலாம். ஆனால் ஒரு விசயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா தேர்தல் அறிக்கையிலேயே நீண்டகாலம் குறுகியகாலம் என்று இருக்கும், அதாவது நீங்கள் புதிதாக கட்டுமான பணியை கட்டிக் கொண்டு வருகிறீர்கள் என்றால் ஒரு வருடம் இரண்டு வருடம் டைம் கொடுக்கலாம், இது அடிப்படை…
பெட்ரோல் விலையை 5 ரூபாய் 4 ரூபாய் குறைப்போம் என்று சொன்னதற்கு மாநில அரசு எவ்வளவுதான் வக்காலத்து வாங்கினால் கூட அது பொய் என்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள், ஒரு தேர்தல் அறிக்கை எடுத்து 500 தேர்தல் அறிக்கை கொடுத்திருக்கிறோம் நூறு தேர்தல் அறிக்கை long-term என்று சொல்லலாம், மீடியம் டெர்ம் என்று சொல்லலாம். பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது எப்படி 1 வருடம் வேண்டும், இரண்டு வருடம் வேண்டும் என்று கேட்பீர்கள் என கேள்வி எழுப்பினார்.