Categories
மாநில செய்திகள்

2019 காவலர் தேர்வு முறைகேடு… சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு!

2019 ஆம் ஆண்டு நடந்த காலர் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 8,888 காவலர் பணியிடங்களை அறிவித்து, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெற்றது. இதற்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு இறுதிப் பட்டியலும்  வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் உயர் நீதிமன்றத்தில் காவலர் தேர்வில் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் விழுப்புரம், வேலூரில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Categories

Tech |