Categories
உலக செய்திகள்

2019-க்கு பின் இந்தியாவுடனான ஆக்கபூர்வமான உரையாடல்…. பாகிஸ்தான் வெளியிட்ட தகவல்….

இந்தியாவுடனான ஆக்கபூர்வமான உரையாடல் கடந்த 2019 ஆம் வருடத்திற்கு பின் கடினமாகிவிட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். தாஷ்கண்ட் நாட்டில் நடைபெறும் எஸ்சிஓ அமைப்பின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் பங்கேற்க பிலாவல் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது “இந்தியா எங்கள் அண்டைநாடு. பல்வேறு விஷயங்களை ஒருவர் முடிவு செய்யமுடியும் என்றாலும், அண்டை வீட்டாரை தேர்வு செய்ய முடியாது. ஆகவே அவர்களுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். அத்துடன் கடந்த 2019ம் ஆண்டிற்கு பின் இந்தியாவுடனான ஆக்கபூர்வமான உரையாடல் கடினமாகி விட்டது.

ஜம்மு, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்பபெறுவதாகவும், அதே வருடத்தில் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாகவும் இந்தியா அறிவித்தது. உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்டில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பாகிஸ்தான் மற்றும் இந்திய பிரதமர்களுக்கு இடையில் எந்த சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்

Categories

Tech |