நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்கட்சிகள் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு என பல்வேறு காரணங்களை காட்டி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தொடங்கிய கூட்டத்தொடரில் நாடு முழுவதும் 2019 இல் மட்டும் 1775 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதும் 2019 மனவளர்ச்சி குறைபாடு, மாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 16ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.