Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

2019 ஜிக்சர் (Gixxer) 155 ஃபேஸ்லிஃப்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!!

இந்நிலையில், வெளியிடுவதற்கு  முன் மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் புதிய மாடலில் மேற்கொள்ளப்பட இருக்கும் சில மாற்றங்கள் பற்றி தெரியவந்துள்ளது. இந்த புதிய ஜிக்சர் 155 மாடலின் வடிவமைப்பில் புத்தம் புதிய ஓவர் வடிவ எல்.இ.டி. ஹெட்லேம்ப் யூனிட், புதிய வடிவமைப்பு கொண்ட ஃபியூயல் டேன்க் (Fuel tank) ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் டோன் பிளாக் (Dual Tone Black) மற்றும் புளு நிற பெயின்ட் ஸ்கீம் செய்யப்பட்டுள்ளது.

Image result for 2019 Suzuki Gixxer 155 Facelift

புதிய மாடலில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் (instrument cluster) புதிதாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்ப்லிட் சீட்கள் (Split seats), டூயல் பில்லியன் கிராப் ஹேன்டில்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை ஜிக்சர் (Gixxer) 155 மாடலில் 155.5 cc சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் (Air-cooled engine) வழங்கப்படலாம். இந்த என்ஜின் 14.1 P.H.P. பவர், 14 N .M . டார்க் மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

Categories

Tech |