Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019-உலக கோப்பை : இந்தியா – பாகிஸ்தான் விளையாட வேண்டும் – ஐ.சி.சி…!!

மேலும் 2019 – உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட்  அணியுடன்  விளையாட கூடாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சவ்ரவ் கங்குலி, கவுதம் காம்பீர், ஹர்பஜன்சிங் உள்ளிட்ட வீரர்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் மூவரும் அப்படி சொல்ல அதே நேரத்தில் சச்சின், சுனில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோர் உலக கோப்பையில் இந்திய அணி விளையாட  வேண்டும் என்று தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் சச்சின் பாகிஸ்தானுடன் விளையாடாமல்  2 புள்ளிகளை இழப்பதை விட விளையாடி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ), பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அந்த முடிவின்படி  செயல்படுவோம் என்று கூறி இருந்தது. 2019-உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகின்ற மே 30-ந்தேதி முதல் தொடங்கி  ஜூலை 14-ந்தேதி வரையில் நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் இரு அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கிறது.

Image result for இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட்

இந்த நிலையில் ஒப்பந்தத்தின்படி உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து நாட்டு உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்.

2019- உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படிஇருக்கும் சூழலில் இந்தியா விளையாடாமல் போவது விதிமுறைக்கு மாறானது என்றும், ஒரு அணி மற்ற அணிகளுடன் விளையாடாமல் போனால் அதற்கான புள்ளிகள் எதிர் அணிக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Image result for ராணுவ தொப்பியை அணிந்து

மேலும் இந்திய அணி வீரர்கள் சமீபத்தில் ராணுவ தொப்பியை  அணிந்து விளையாடியது தீவிரவாத தாக்குலில்  பலியான வீரர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதாகும். புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு உதவுவது அவசியமானது. நாங்கள் விளையாட்டுடன் அரசியலை கலக்க விரும்பவில்லை. இது ஐ.சி.சி.யின் மிக தெளிவான குறிக்கோள் ஆகும். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நேரடி கிரிக்கெட் போட்டித் தொடர் இருநாட்டு அரசுகள் மற்றும் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சம்மந்தப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |