Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 உலக கோப்பை : வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி  உலகக்கோப்பையில் களமிறங்கும் வீரர்களை நேற்றைய முன்தினம் அறிவித்தது 

2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில்  நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச அணிகளை அறிவிப்பதற்கு  ஐ.சி.சி ஏப்ரல் 23 ம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருந்தது. ஏற்கனவே அனைத்து நாடுகளும் தங்கள் அணியை அறிவித்தது.

இந்நிலையில் கடைசி நாளான நேற்றைய முன்தினம் வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பைக்கான 15 வீரர்களை தேர்வு செய்தது.

Image

உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி :

ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்செல், ஆஷ்லே நர்ஸ்,  கார்லஸ் பிராத்வெய்ட், கிறிஸ் கெய்ல், டேரன் பிராவோ, இவின் லீவிஸ், பாபியன் ஆலென், கெமார் ரோச், நிகோலஸ் பூரன்,   ஒஷானே தாமஸ். ஷாய் ஹோப், ஷெல்டன் காட்ரெல், ஷனோன் கேப்ரியல், ஹெட்மயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதிரடி மன்னன் பொல்லார்ட், சாமுவேல்ஸ் அணியில் இடம் பெறவில்லை. மேலும் சுனில் நரேனுக்கு காயமடைந்துள்ளதால் அவரும் ஓரங்கட்டப்பட்டார். கிறிஸ் கெயிலும், ஆண்ட்ரே ரஸெலும் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டனர்.  கிறிஸ் கெயிலுக்கு  இது 5வது உலக கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |