Categories
மாநில செய்திகள்

“202-23 பட்ஜெட்”…. குடும்பத்திற்கு ரூ.2.97 லட்சம் கடன்…. வெளியான தகவல்…..!!!!

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “இக்கால நவீனத் தேவைகளையும், எல்லார்க்கும் எல்லாம் என்ற நூற்றாண்டு கால திராவிட-சமூகநீதிக் கொள்கைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்று காலை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கை தமிழக நிதிநிர்வாகத் துறைக்கு மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது.

இந்த தமிழக பட்ஜெட்டில் மாநில அரசின் மொத்த கடன் ரூ.6.53 லட்சம் கோடியாக இருக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2022-23 ஆம் ஆண்டு மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 26.29 சதவீதமாக இருக்கும். அத்துடன் ரேஷன் கார்டுகள் அடிப்படையில் அதனை கணக்கிட்டால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2.97 லட்சம் கடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.

 

Categories

Tech |