Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

2020யில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகைகள்… லிஸ்டில் இடம் பெறாத லேடி சூப்பர் ஸ்டார்… ரசிகர்கள் வருத்தம்…!!

2020யில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகைகளின் பட்டியலில் நயன்தாராவின் பெயர் இடம்பெறாததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

ஆண்டுதோறும் சமூக வலைதளமான ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட படங்கள், நடிகர்கள் , நடிகைகள் குறித்து சர்வே எடுப்பது வழக்கம். அதில் இந்த வருடம் அதிகம் ட்விட்டரில் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்கள் பட்டியலில் முதலிடத்தை நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பெற்றுள்ளது . அதேபோல் அதிகம் ட்வீட்  செய்யப்பட்ட நடிகர்கள் பட்டியலில் விஜய் 3வது இடத்தையும், சூர்யா 5வது இடத்தையும்; தனுஷ் 8வது இடத்தையும் பெற்றிருந்தனர் .

இதையடுத்து இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட நடிகைகளின் பட்டியலில் கீர்த்தி சுரேஷ் முதலிடத்தை பிடித்துள்ளார் . இவரையடுத்து  வரிசையாக காஜல் அகர்வால் ,சமந்தா, ராஷ்மிகா, பூஜா ஹெக்டே, தமன்னா ,ரகுல் பிரீத் சிங், சுருதிஹாசன், திரிஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்தப் பட்டியலில் தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்துள்ளது .

 

Categories

Tech |