அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் வாகன விபத்தை ஏற்படுத்தி மூன்று குழந்தைகளை அனாதையாக்கிய யுவதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் ஆனது கடந்து 2020 டிசம்பர் மாதம் கலிபோர்னியாவின் நியூ போர்ட் கரை பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் விசாரணை எதிர்கொண்ட 23 வயது கிரேஸ் கோல்மன் என்ற யுபதிக்கு நியூ போர்ட் கடற்கரை நீதிமன்றம் 21 வருடங்கள் முதல் ஆயுள் தண்டனை விதித்து சிறை தண்டனை விதித்திருக்கின்றது. நீதிபதி தீர்ப்பை அறிவிக்கையில் கிரேஸ் கோல்மன் கண்களில் நீர் வழிய தலை குனிந்து நின்றதாக கூறப்படுகின்றது.
மேலும் 2020 டிசம்பர் மாதம் நியூ போர்ட் கடற்கரை பகுதியில் கிறிஸ்மஸ் அலங்காரங்களை பார்வையிட்டு வந்த 27 வயது ஹென்றி எட்வர்டோ சல்டானா- மெசியா மற்றும் அவரது மனைவி கேப்ரியல்லா ஆன்ரேட் மற்றும் மூன்று குழந்தைகள் போன்றோரின் வாகனம் மீது கிரேஸ் கோல்மன் தனது ரேஞ்ச் ரோவரால் மோதி இருக்கின்றார். இதில் சம்பவ இடத்திலேயே ஹென்றி எட்வர்டோ தம்பதியினர் உயிரிழந்தனர். அந்த கோர விபத்திற்கு பின் தங்கள் சிதைந்த காரில் சிக்கிக் கொண்டு மூன்று சிறுமிகளும் கதறினர். இதற்கு இடையே அந்த சத்தத்தை கேட்டு அருகில் வந்த கிரேஸ் அடுத்த நிமிடமே அங்கிருந்து தப்ப முடிவு செய்துள்ளார். ஆனால் போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கிரேஸ் கோல்மன் அனுமதிக்கப்பட்ட அல்லது விட மூன்று மடங்கு அதிகமாக மது அருந்தியது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்திருக்கின்ற நிலையில் 21 வருடங்கள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதித்து இருக்கின்றனர். இந்த கோர விபத்தினால் அனாதையாக்கப்பட்ட மூன்று சிறுமிகள் தற்போது உறவினர்கள் அரவணைப்பில் இருக்கின்றனர். இது மட்டும் இல்லாமல் மூன்று சிறுமிகளும் அந்த விபத்தில் பலத்த காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளனர். காயங்களில் இருந்து மீண்டு வந்தாலும் உளவியல் ரீதியாக மூன்று சிறுமிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.