Categories
உலக செய்திகள்

2020 க்கு பின் சீன அதிபருடன் பிரதமர் மோடி பங்கேற்பு… ஹாங்காய் ஒத்துழைப்பு மாநாடு…!!!!!!

ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கன் நகரில் தொடங்கி இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் வியாழக்கிழமை உஸ்பெகிஸ்தான் சென்றடைந்துள்ளார். அவருக்கு உரிய வரவேற்பு அளிக்கப்பட்டு மாநாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். அதேபோல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீன அதிபர் ஜெசிங் பின் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் போன்றவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் உஸ்பெகீஸ்தான் சம்மர்கண்டு நகரில் ஷாங்காய் உச்சி ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுவார். அப்போது அவர் பேசிய போது உலகம் கொரோனா தொற்று நோயை முறியடித்து வருகிறது கொரோனா உக்ரைன் ரஷ்யா போரால் உலகளாவிய விநியோக சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும் பொருட்கள் உற்பத்தியில் மையமாக இந்தியா மாற விரும்புகிறது. ஒவ்வொரு துறையிலும் புதுமைகளை நாங்கள் ஆதரிக்கின்றோம். இன்று நமது நாட்டில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ப் அப்கள் மற்றும் 100 யூனிகான்கள் இருக்கின்றன என தெரிவித்துள்ளார். மேலும் 2020இல் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவத்திற்கு பின் முதன் முறையாக சீன அதிபரை நேரில் சந்தித்து பேச இருக்கின்றார் பிரதமர் மோடி. அதேபோல உக்ரைன் ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளுக்கு பின் ரஷ்ய அதிபரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2020 கள்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் நிகழ்வுக்கு பின் முதன் முறையாக சீன அதிபருடன் ஒரே மேடையில் பிரதமர் மோடி பங்கேற்று இருக்கிறார்.

Categories

Tech |