Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2020-2021ல இந்த பிரச்சனை வராம இருக்குமா…? மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தகவல்….. எதிர்பார்ப்பில் சென்னை மக்கள்….!!

சென்னையில் இவ்வாண்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும் என மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது தண்ணீர் பிரச்சனை தான். வருடத்தில் ஒருமுறையாவது, இந்த பிரச்சனையை பெரிய அளவில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த 2020இல் செப்டம்பர் மாதம் மழைப்பொழிவு அதிகம் இருந்ததால், சென்னையில் இந்த ஆண்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்று மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 15 மண்டலங்களில், 16 மண்டலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் நிலத்தடி நீர் உயர்வு இருக்கும் என்றும், கோடம்பாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு சென்னை மக்கள் தொகையை கணக்கிடுகையில் போதுமானதாக இருக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Categories

Tech |