ரெப்போ வண்டி விகிதம் எந்த மாற்றமுமின்றி 4 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்தி காந்ததாஸ் நிதிக் கொள்கை தொடர்பான மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் 2020-21 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி 9.5 சதமாக குறையும் என தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டின் நான்காவது கால ஆண்டிலிருந்து பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்று கூறினார். சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு பணப்புழக்கம் மற்றும் நிதி நிலைமையை எளிதாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.