இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் நலனை முக்கியமாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி நடக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Indian Premier League 2020 season has now been postponed indefinitely: BCCI Official pic.twitter.com/5kWlfHCh54
— ANI (@ANI) April 15, 2020
சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,1000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்க இருந்தன. இந்தப் போட்டிகளைக் காண மைதானங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள் கூடுவார்கள். எனவே வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதால் இந்தப் போட்டிகளுக்குத் தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனால் ஐபிஎல் போட்டிகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் நேற்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் 2020 ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிகள் 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.