2021 அம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், நடக்கும் அதிமுக ஆட்சி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதா என்று ஆர்டிஐதகவல் அளித்துள்ளது .
ஆர்டிஐ அளித்த தகவலின் படி 2017-2020 ஆண்டில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் விதமாக, சிறிய அளவு முதல் பெரிய அளவு வரையிலான வேலைவாய்ப்புகள் பல தனியார் நிறுவனங்களின் மூலமாக, வேலைவாய்ப்பு மையங்களில் நடத்தப்பட்டுள்ளன. இவை ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தப்பட்டுள்ளன. மேலும் 2018 ஆம் ஆண்டு முதல் ‘வேலைவாய்ப்பு வெள்ளி’ என ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2017- 2020 நவம்பர் வரை 2,42,143 பேர் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
கொரோனா காலக்கட்டத்தில் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மையை தவிர்க்க, தமிழ்நாடு தனியார் வேலைவாய்ப்புத் தளம், www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தை உருவாக்கி, அதில் தகுதியான வேலையைத் தேட உதவி செய்துள்ளது. இதனை முதலமைச்சர் பழனிச்சாமி ஜூன் 16, 2020 ஆண்டு தொடங்கி வைத்துள்ளார்.
இந்தத் தளத்தில் தற்போது வரை 88, 753 பேர் வேலைக்காகவும், 3012 நிறுவனங்கள் ஆட்சேர்ப்புக்காவும் பதிவு செய்துள்ளன. மொத்தம் 37, 373 காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 16, 340 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. 197 மாற்றுத்திறனாளிகளும் இதில் அடங்குவர். மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மூலமாக 16, 543 பேர் அரசு வேலைகளில் இடம்பிடித்துள்ளனர். அதில் 577 மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர்.
அதுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், டிஎன்யுஎஸ் ஆர்பி, ஆர் ஆர் பி, டெட் போன்றவற்றிற்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையங்களில் மாவட்டரீதியாக இலவச பயிற்சி அளித்து வருகிறது.
www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 83,332 பேர் பயனடைந்து வருகின்றனர். 2017-2020 வரை வேலைவாய்ப்புகள் எந்தத் துறைகளில் அதிமாக உருவானது என்னும் கேள்விக்கு ஆர்டிஐ அளித்த தகவலின் படி,ஆட்டோமோடிவ் துறை, உற்பத்தி துறை, வங்கி மற்றும் ஃபைனான்ஸ் துறை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹார்ட்வேர் துறை, ஜவுளி மற்றும் கைத்தறி, ஐடி, சில்லறை விற்பனையகங்கள் ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் 2017- 2020 வரை ஆன காலக்கட்டத்தில், பெண்களைவிட ஆண்களே அதிகமாக வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பின்மை பற்றிய புள்ளிவிவரங்களை மாதம் ஒருமுறை மற்றும் ஆண்டு வாரியாக, சிஎம்ஐஇ மற்றும் பிஎல்ஃப்ஸ் அமைப்புகள் www.umemploymentinindia.cmie.com மற்றும் www.mospi.gov.in என்ற வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.