2020 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்டம் அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியல், துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டது.
பசி போக்குதல், யுத்தம் பாதித்த பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த அளிக்கப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உலக உணவுத்திட்டம் அமைப்பிற்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 88 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி மக்களுக்கு இந்த அமைப்புகளை வழங்கியுள்ளது.