சச்சின் கேப்டனாக களமிறங்கும் தகவல் ரசிகர்கள் மனதில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சாலை பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இன்றைய காலகட்டத்தில் இருந்து வருகிறது அதிகப்படியான மரணங்கள் சாலை விபத்துகளினால் நேர்ந்து வருகிறது இந்நிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரபல கிரிக்கெட் வீரர்கள் உலக தொடர் டி20 போட்டி ஒன்று நடத்த உள்ளனர். சச்சின் மட்டுமல்லாது அனைவருக்கும் பிடித்த கிரிக்கெட் வீரர்களை டி20 டோர்னமெண்டில் பார்க்க போகிறோம். இந்த டோர்னமெண்டில் பெரிய பெரிய வீரர்கள் எல்லாம் விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உள்ளனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக தொடர் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் அணியை கொண்டு செல்ல உள்ளார். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து நாளை முதல் போட்டியாக இந்திய அணியும் வெஸ்டின்டிஸ் அணியும் மும்பையில் உள்ள மைதானம் ஒன்றில் மோத உள்ளனர்.