Categories
தேசிய செய்திகள்

2020ஆம் ஆண்டு… அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்விட்… என்னென்ன தெரியுமா..?

2020ஆம் ஆண்டு டுவிட்டரில் தாக்கம் செலுத்திய பதிவுகள் குறித்து ட்விட்டர் நிர்வாகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் பயன்பாடு என்பது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றது. சமூக வலைதளங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. அதிலும் கொரோனா காலம் என்பதால் வீட்டில் முடங்கி இருந்த மக்கள் எப்பொழுதும் செல்போனும் கையுமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி கொண்டேதான் இருந்திருக்கின்றனர். மக்கள் பிரபலங்கள் அதிகம் நாடும் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் தளத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான பயன்பாட்டு செயல்பாடுகள் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டது.

2020ஆம் ஆண்டு அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட புகைப்படமாக மாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட விஜய்யின் புகைப்படம் 2020 ஆம் ஆண்டுக்கான அதிகம் ரீட்வீட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல்ரீதியாக பிரதமர் மோடி கொரோனாவிற்காக வீட்டில் விளக்கு ஏற்றிய படம் ரீட்வீட் செய்யப்பட்டது. விளையாட்டின் பக்கம் சென்றால் மகேந்திரசிங் தோனி பகிர்ந்த மோடியின் கடிதம் மற்றும் விராட் கோலி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருந்ததை வெளியிட்ட ட்வீட் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்டதாக அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது இவர்கள் என்ற தலைப்பின் கீழ் கொரோனவைரஸ், நடிகர் சுஷாந்த் சிங் மரணம், ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிக அளவில் பேசப்பட்டு வந்துள்ளது. 10 லட்சம் டிவிட்டுகள் 22 நகரங்களில் இருந்து 100 நாட்களில் வந்ததாகத் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகம் உபயோகித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இதில் மக்களின் பொழுதுபோக்கு தொடர்பான சமையல், புகைப்படம், யோகா, உடற்பயிற்சி, கவிதை குறித்த உரையாடல்கள் நடைபெற்றுள்ளன. உலக அளவில் ஒரு நிமிடத்திற்கு 7000 ட்வீட் டிவி மற்றும் திரைப்படம் குறித்து பதிவாகியுள்ளது. தமிழில் சூரரைப்போற்று திரைப்படம் ட்விட்டரில் அதிகம் விவாதத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |