தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஆய்வுக் கூட்டங்கள் நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கலைஞர் கருணாநிதி மறைந்த ஒரு ஆண்டு குறித்தும், திமுக தலைவர் மு க ஸ்டாலின் 2021ல் வெற்றிபெற்று பெறுவோம் என்ற சூளுரை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்க்கு முதல்வர், அவர் ஒரு மூத்த அரசியல் தலைவர். நீண்ட காலமாக தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்துள்ளார். அவருடைய மறைவு அந்த கட்சிக்கு பேரிழப்பாக நான் கருதுகின்றேன். அரியணை யார் ஏறுவார்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்று முதல்வர் தெரிவித்தார்.