மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ்கின்றனர் என்றும் பாதுகாப்பான நகரமாக சென்னை, கோவை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரவிலும் பெண்கள் வெளியில் சென்று வருகின்றனர். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டதால் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன. எனினும் அதிமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பொய் செய்தியை பரப்பி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது, அதனால் தான் அனுமதி வழங்கப்படுகிறது என்றும் தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து திமுக வாங்கிய கடனுக்கும் சேர்த்து வட்டி கட்டி வருகின்றோம். திமுக ஆட்சியில் இருக்கும் போது ரூ. 1 லட்சம் கோடி கடன் என்றால் இன்றைய விலைவாசியை பார்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டு கடனுக்கு தொடர்ந்து வட்டியும் கட்டி வருவதால் கடன் தொகை உயர்ந்துள்ளது என கூறினார். மேலும் 2021ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சியே தொடரும், எப்போது பார்த்தலும் முதல்வர் கனவிலே இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஆனால் அவர் எண்ணம் பலிக்காது என அதிரடியாக கூறியுள்ளார்.
அரசின் திட்டங்கள் வெற்றியடைவதால் ஸ்டாலின் உள்ளிட்டோரால் பொறுக்க முடியவில்லை. கே. சி. பழனிசாமி போன்றோரின் கருத்துகளை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு 7 பேரை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். 7 பேரை விடுவிக்க ஆளுநர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
7 பேரை விடுவிப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் ஜெயலலிதாவின் பிறந்தாள் நிகழ்ச்சியில் இருப்பதால் டெல்லி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றும் தகவல் அளித்துள்ளார். என்.பி.ஆரில் 3 அம்சங்கள் குறித்து விருப்பப்பட்டால் சொல்லலாம் இல்லையெனில் வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.