இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு மரியா ரெசா, டிமிட்ரி முராட்டோவ் ஆகிய இருவருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக பேச்சுரிமை என்ற அடிப்படையில் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.. அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது..
பேச்சுரிமை ஜனநாயகத்துக்கு இன்றியமையாதது என்ற அடிப்படையில் அது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்த இருவருக்கும் இந்த விருது பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. விலைமதிக்க முடியாதது ஜனநாயகம்.. அதுவே அனைவருக்கும் சம வாய்ப்புகளை தரும்.. இவர்கள் இருவரும் ஜனநாயகம், பேச்சுரிமைக்கு செய்திருக்கும் இன்றியமையாத சேவையை கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது..
உலகம் முழுதும் நான் பார்க்கிறோம்.. சர்வாதிகாரமாக பலரும் பாதிக்கப்படுகிறார்கள். ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.. அவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், சம உரிமை, ஜனநாயகம், பேச்சுரிமை முக்கியம் என்பதை கருத்தில் கொண்டே இவர்களுக்கு விருது பகிர்ந்து வழங்கப்பட்டது.
BREAKING NEWS:
The Norwegian Nobel Committee has decided to award the 2021 Nobel Peace Prize to Maria Ressa and Dmitry Muratov for their efforts to safeguard freedom of expression, which is a precondition for democracy and lasting peace.#NobelPrize #NobelPeacePrize pic.twitter.com/KHeGG9YOTT— The Nobel Prize (@NobelPrize) October 8, 2021