வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் யார் ? என்பது குறித்த விவாதம் தமிழக அரசியல் அனல் பறந்தது. அமைச்சர்கள் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த முக்கிய பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில்,
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!
தாய்வழி வந்த
தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று
நேர்வழி சென்றால்
நாளை நமதே! https://t.co/3afZ16jKAg— O Panneerselvam (@OfficeOfOPS) August 13, 2020