2021 இல் கோடை எவ்வளவு வெப்பமாக இருக்கும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் சில தென் மாநிலங்களை தவிர இந்த ஆண்டு கோடை காலம் வழக்கத்தைவிட வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரை கோடைகாலம் நிலவும் என்று இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது.
கோடை காலம் பற்றிய முன்னறிவிப்பு :
வடக்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியா என்று வானிலை உட்பிரிவுகள் மற்றும் பிராந்தியங்கள் மற்றும் கிழக்கு பகுதியில் சில இடங்களில் மார்ச் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இயல்பான அதிகபட்ச வெப்பநிலை நிலவும்.
இயல்பான குறைந்தபட்ச வெப்பநிலை:
இமயமலையின் அடிவார பகுதியில் வட கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் மார்ச் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இயல்பான குறைந்தபட்ச வெப்பநிலைக்கு அதிகமான வெப்பநிலை நிலவும்.
இந்த ஆண்டு கடுமையான கோடை வெப்பத்தை எதிர் கொள்ளப்போகும் பகுதிகள் எவை?
சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகள், கோவா, ஆந்திரப்பிரதேச கடலோர பகுதி ஆகிய இடங்களில் வரும் நாட்கள் அதிகபட்ச வெப்பநிலை நிலவும். கிழக்கு மற்றும் மேற்கு உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் மார்ச் முதல் மே மாதம் வரை இயல்பை விட அதிகமான வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மாநிலங்களில் வெப்பநிலை குறையும் இடங்கள்:
தென் தீபகற்பத்தின் பெரும்பாலான உட்பிரிவுகள் மற்றும் ஒட்டியுள்ள மத்திய இந்திய பகுதிகளை விட தென் மாநிலங்களில் சில பகுதிகளில் இயல்பான அதிகபட்ச வெப்ப நிலையை விட குறைவான வெப்பநிலை நிலவும்.
முன்னறிவிப்பின்றி சூழ்நிலைகள் மற்றும் 2003 முதல் 2018 காலகட்டத்தின் கோடை காலம் முன்னறிவிப்பு தரவுகளின் அடிப்படையில் தற்போது முன்னறிவிப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களுக்கு அப்டேட் செய்யப்பட்ட கால நிலை அறிக்கையை ஐ எம் டி வெளியிடும்.