2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி சான் ஜுவான் நகரில் நடைபெற்றது.
2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி சான் ஜுவான் நகரில் நடைபெற்றது. இதில் 40 நாடுகளின் அழகிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பியலவுஸ்கா அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். மேலும் இவர் 2021 ஆம் ஆண்டில் உலக அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் உலக அழகிப் போட்டி நடைபெற இருந்த நிலையில் போட்டியாளர்களில் சிலருக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ஸ்ரீ சைனி இரண்டாவது இடத்தையும், ஐவரிகோஸ்ட் நாட்டின் ஒலிவியா யேஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய அழகி மானசா வாராணசி 13வது இடத்தை பெற்றுள்ளார்.