ஆசிரியை ஒருவருக்கு இந்த 2021 ஆம் வருட புத்தாண்டில் மிக பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
கனடாவில் உள்ள வான்கூவர் என்ற பகுதியில் Rabecca Markenzie என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு இவருக்குத்தான் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதாவது இவருக்கு லாட்டரியில் பரிசுத் தொகை பெரிய அளவில் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கு BC/49 என்ற டிக்கெட்டில் $1 பரிசு விழுந்துள்ளது.
இதே போல் 6/49 குழுக்களில் $5,00,000 பரிசு கிடைத்துள்ளது. இது குறித்து Rabecca Markenzie கூறுகையில் “இவ்வளவு பெரிய பரிசு தொகை எனக்கு தான் கிடைத்துள்ளது என்பதை என்னால் நம்ப முடியவில்லை”. மேலும் “மகிழ்ச்சியில் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது” என்றார். மேலும் சொந்த வீடு ஒன்று வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சித்து வந்தேன். தற்போது அதற்கான நேரம் கிடைத்து விட்டது. மேலும் தன் ஆசையும் நிறைவேறி உள்ளதாக கூறியுள்ளார்.