இந்தியாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறையில் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது
இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் நடப்பதால், வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறையில் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. இது குறித்து அறிவிப்பு தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் சீரான போக்குவரத்தை உறுதி செய்ய சுங்கச்சாவடிகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட்ப பயன்பாட்டை இறுதி செய்துள்ளது. வாகனங்களின் இயக்கத்தைப் பொறுத்து சுங்க கட்டணம் வாகன ஓட்டிகளின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.