Categories
தேசிய செய்திகள்

2021 ஜனவரி 1 முதல்… வங்கிகளில் புதிய மாற்றம்… அதிரடி அறிவிப்பு…!!!

காசோலை மோசடிகளை தடுக்கும் வகையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து காசோலைக்கும் பாசிட்டிவ் பே பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படுகிறது.

வங்கியின் காசோலை மோசடிகளை தடுக்கும் வகையில் வருகின்ற ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பாசிடிவ் பே என்ற புதிய பாதுகாப்பு நடைமுறை அமல் படுத்தப்படுகிறது. அதன்படி காசோலையை வழங்குபவர்கள், அதன் எண், தொகை, நாள், காசோலை பெரும் நபர், காசோலையின் முன் மற்றும் பின்பக்க படம் ஆகியவற்றை தாம் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான தொகை வழங்கப்படும் காசோலைகளில் இந்த விவரங்களை சரிபார்த்த பிறகே, அந்தத் தொகையை வங்கிகள் வழங்கும். ஏற்கனவே காசோலை மோசடிகளை தடுக்க 2010ஆம் ஆண்டு CTS பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவரப்பட்டாலும், கூடுதல் பாதுகாப்பிற்காக இப்போது positive pay என்ற நடைமுறை அமலுக்கு வருகிறது.

 

Categories

Tech |