வருகின்ற 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வாட்ஸ்அப்பில் புதிய அம்சங்களை அப்டேட் செய்ய போவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக மக்களின் அன்றாட வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக செல்போன் மாறிவிட்டது. அனைவரின் வாழ்க்கையிலும் செல்போன் முக்கிய அங்கமாக உள்ளது. மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே கலந்துரையாடல்கள் மற்றும் வீடியோ கால் போன்றவற்றை செய்து வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில் நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக வாட்ஸ் அப்பில் பணம் பரிமாற்றம் போன்ற புதிய புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.
இந்நிலையில் சில புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, எந்த நேரத்திலும் மிஸ்டு குரூப் கால்ஸ், குரூப்களில் இணையும் வசதி, ஒரே நேரத்தில் பல புகைப்படங்கள், வீடியோக்கள் போஸ்ட் செய்யும் வசதி, வாட்ஸ்அப் வெப் கால் உள்ளிட்ட வசதிகள் 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் வாட்ஸ்அப் பயனாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.