Categories
தேசிய செய்திகள்

2021 ஜனவரி 31 வரை நீட்டிப்பு… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

வெங்காய இறக்குமதிக்கான விதிமுறை தளர்வுகள் 2021 ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெங்காயத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள். அப்போது மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான விதிமுறை தளர்வுகள் விதித்தது.

இந்நிலையில் வெங்காயம் இறக்குமதிக்கான விதிமுறை 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி உள்நாட்டு சந்தைகளில் வெங்காயத்தின் இருப்பை அதிகரிக்கவும், விலையை கட்டுப்படுத்தவும் வேளாண் அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் டெல்லியில் வெங்காயம் விலை கிலோ 70 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |