Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

2021 தமிழக தேர்தல்…. இன்னோவா கார் பரிசு…. பாஜக அதிரடி அறிவிப்பு …!!

பாஜகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் மாநில தலைவர் எல்.முருகன்  காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 198 பேர் பங்கேற்றார்கள். முன்னதாக மறந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இரண்டாம் ஆண்டு நினைவுவை நினைவு கூர்ந்த பின் ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர்களுக்கு எல்.முருகன் முக்கிய அறிவுரை வழங்கினார்.

அதில் எந்த ஒரு மாவட்டத்தில் இருந்து எம்எல்ஏக்கள், மக்கள்  பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் மாவட்டத்திற்கு தேர்தெடுக்க படுகின்றார்களோ அந்த மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசு வழங்கப்படும் என மாநில தலைவர் அறிவித்தார்.

வரக்கூடிய ஆறு மாதங்களில் தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய மாற்றம் நிகழப் போகிறது.  நாம் கைகாட்டும் நபர்தான் ஆட்சிக் கட்டிலில் அமர போகிறார்கள். எனவே தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நம்முடைய எண்ணம் எல்லாம்   சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்களை அனுப்பவேண்டிய நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார்.

Categories

Tech |