Categories
மாநில செய்திகள்

2021 பிப்ரவரிக்குள் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் …!!

நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவை சேர்ந்த பேராசிரியர் மணிண்டாகர்வால் ராய்டஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தங்களது கணிப்புப்படி இந்தியாவில் தற்போது 30% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் 50 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறிய அவர் முகக்கவசம் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ஒரே மாதத்தில் 26 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குளிர்காலம் மற்றும் பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |