Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

2021 முதல் மாணவர்களுக்கு… கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வருகின்ற கல்வியாண்டு முதல் ஒரே தேர்வு நடத்தப்படும் என மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை.அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் வருகின்ற கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார். AICTE, UGC அமைப்புகள் இருக்காது. பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகிய மூன்று அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டு புதிய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. மேலும் மத்திய பல்கலைக்கழகம் நடத்தி வரும் தனித் தனி நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |